Published:Updated:

`மத்திய அரசுப் பணிகளில் 7 லட்சம் காலி இடங்கள்!' -மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

ஒரு துறையில் காலியிடங்கள் இருப்பது தெரியவந்து, அவற்றை நிரப்பும்போதே இன்னொரு பக்கம் புதிய காலியிடங்கள் ஏற்படுகின்றன.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசுப் பணிகளில் சுமார் 7 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மத்திய அரசுப் பணியிடங்களில் அதிகபட்சமாக, ரயில்வே துறையில் மட்டும் மொத்தம் 2,59,369 காலியிடங்களும் பாதுகாப்புத்துறையில் 1,87,054 காலியிடங்களும் உள்ளாட்சித்துறையில் 72,365 காலியிடங்களும் இருப்பதாகத் தெரிவித்தார்.

`தினமும் 100 பேருக்கு சாப்பாடு... ஜனவரியில் புது இலக்கு!' -வில்லன் நடிகரின் `மக்கள்' சேவை

மேலும், " மத்திய அரசுப்பணிகளில் காலியிடங்களை நிரப்புவதென்பது தொடர்ச்சியான செயல்முறை. ஒரு துறையில் காலியிடங்கள் இருப்பது தெரியவந்து, அவற்றை நிரப்பும்போதே இன்னொரு பக்கம் புதிய காலியிடங்கள் ஏற்படுகின்றன. சில காலியிடங்கள், தொடர்ந்து 2, 3 ஆண்டுகளாக அப்படியே இருந்தால், அந்தப் பணியிடத்தின் தேவைகுறித்து ஆய்வு நடத்தப்படும்" என்றார்.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
vikatan

2014-ம் ஆண்டில், மொத்தம் 36.45 லட்சம் பணியிடங்கள் இருந்தன. தற்போது, 38.02 லட்சம் பணியிடங்கள் இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் புதிதாக 1.57 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், மொத்தமுள்ள பணியிடங்களில் 31.18 லட்சம் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்டுள்ளன. சுமார் 7 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக 2019-20-ம் ஆண்டுக்கு 1,05,338 பணியாளர்களைத் தேர்வுசெய்யும் பணி தொடங்கிவிட்டதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.