Published:Updated:

2 மணி நேரப் போராட்டம்; 7 பேர் உயிரிழப்பு! - மும்பையைப் பதறவைத்த ஓ.என்.ஜி.சி விபத்து

சத்யா கோபாலன்

நவி மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Uran ONGC plant
Uran ONGC plant ( ANI )

மகாராஷ்ட்ரா மாநிலம் நவி மும்பைக்கு அருகில் உள்ள உரான் என்ற இடத்தில் பொதுத்துறை நிறுவனத்துக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி ஆலை இயங்கி வருகிறது. அங்கு வழக்கம்போல் இன்று காலை முதல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

Uran ONGC plant
Uran ONGC plant
ANI

காலை 7 மணியளவில் ஆலையில் உள்ள கச்சா எண்ணெய் வடிகால் பகுதியில் திடீரென தீ பற்றியுள்ளது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள், தீ மற்ற இடங்களுக்கும் பரவத்தொடங்கியுள்ளது. தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஊழியர்கள், ஆலையிலிருந்த அனைத்து கச்சா எண்ணெய் குழாய்களையும் மூடியுள்ளனர். தொழிலாளர்களின் துரித நடவடிக்கையால் மிகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Vikatan

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐந்து ஓ.என்.ஜி.சி தொழிலாளர்கள் மற்றும் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Uran ONGC plant
Uran ONGC plant
ANI

தீ விபத்து தொடர்பாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `இன்று காலை உரான் ஆலையின் வடிகால் பகுதியில் ஏற்பட்ட தீ, அடுத்த இரண்டு மணி நேரங்களில் அணைக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி-யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தீ விபத்து முறையாகக் கையாளப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளது.

Vikatan

ஓ.என்.ஜி.சி-யில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஆலையைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொழிலாளர்களின் வேலையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆலையில் நடந்த தீ விபத்தால் மும்பையில் இன்று காலை முதல் கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எம்.ஜி.எல் (MGL) என்ற மாநகர் கேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `உரான் ஓ.என்.ஜி.சி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் எங்களது வடலா நிலையத்தில் கேஸ் பெறுவது பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயுவில் எந்தவித இடையூறும் இல்லாமல் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்” என அறிவித்துள்ளது.