Published:Updated:

தண்டவாளத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு; தெரியாமல் கையிலெடுத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு ( ட்விட்டர் )

கொல்கத்தா அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தண்டவாளத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு; தெரியாமல் கையிலெடுத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

கொல்கத்தா அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு ( ட்விட்டர் )

மேற்கு வங்க மாநிலம் பட்பராவில் ரயில் தண்டவாளம் அருகே மூன்று சிறுவர்கள் விளையாடியக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் அங்கு வீசப்பட்டிருந்த பொட்டலத்தை பந்து என நினைத்து, கையில் எடுத்து விளையாடினர். அந்த நேரத்தில், சிறுவர்கள் கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொட்டலம் திடீரென வெடித்துச் சிதறியது. அதில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்தான். கொல்கத்தாவிலிருந்து 30 கி.மீ தொலைவில், இன்று காலை 8:30 மணியளவில் காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரயில்வே நிலையங்களுக்கு இடையே, ரயில்வே தண்டவாளம் அருகே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு
தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு
ட்விட்டர்

இது தொடர்பாக போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸார், ``தண்டவாளத்தில் சில சமூக விரோதிகளால் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வெடிகுண்டை பந்து என நினைத்து விளையாட ஆரம்பித்திருக்கின்றனர். எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்ததில் ஏழு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

அதன்பிறகு அந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மூன்று சிறுவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.