எல்லையில் தொடரும் பதற்றம்: பாரிக்கர்,தல்பீர் சிங் காஷ்மீர் விரைந்தனர் | Manohar Parrikar and dalbir singh visited kashmir to review security situation

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (02/11/2016)

கடைசி தொடர்பு:10:44 (03/11/2016)

எல்லையில் தொடரும் பதற்றம்: பாரிக்கர்,தல்பீர் சிங் காஷ்மீர் விரைந்தனர்

இந்திய பாகிஸ்தான் எல்லை கடந்த ஒரு வாரமாகவே மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்தியாவில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர்  நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில் இந்திய-பாக்., எல்லையில் இந்த துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து இன்றும் நீடிப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக இன்றும் பல உயிரிழப்புகளும், படுகாயங்களும் ஏற்பட்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் தலைமை ராணுவ தளபதி ஆகியோர் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து பார்வையிட காஷ்மீருக்குச் சென்றுள்ளனர். இதில் பாரிக்கர் இன்று முழுவதும் ஶ்ரீநகரில் தங்கி இருந்து துருப்புகளை நாளையும் பார்வையிடுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க