லிங்க்டு-இன் மத்திய அரசுடன் ஒப்பந்தம்

இணையவழி வேலை தேடுவதற்கு பயன்படும் லிங்க்டு-இன் நிறுவனம் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 


இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கு சீக்கிரமாக வேலை கிடைக்க பெறும் என லிங்க்டு-இன் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் வழியாக, இந்தியாவில் முன்னணியில் இருக்கும் 35 கார்ப்பரேட்களுடன் தொடர்பு வைத்து கொள்ளப்படும். அதன் மூலம், இந்திய மாணவர்கள், அவர்கள் வசிக்கும் இடம், படிக்கும் கல்லூரி என்று பாரபட்சம் இல்லாமல் வாய்ப்பு கிடைக்க பெறும்.


இந்த விஷயம் குறித்து லிங்க்டு இன் நிறுவனம்,'இந்த புதிய ஒப்பந்தம் மூலம், இந்திய மாணவர்களை அவர்கள் கனவுக்குப் பக்கத்தில் கொண்டு செல்ல உதவுவோம்' என்றது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!