ராம்கிஷனை தியாகியாக அறிவிக்க டெல்லி அரசு முடிவு | Delhi cabinet decides to declare ram kishan as martyr

வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (04/11/2016)

கடைசி தொடர்பு:10:38 (05/11/2016)

ராம்கிஷனை தியாகியாக அறிவிக்க டெல்லி அரசு முடிவு

ஒரே பதவி, ஓர் ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் எழுப்பிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்த ராம்கிஷன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளிப்பதாக டெல்லி மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ராம் கிஷனை தியாகியாக அறிவிக்கவும் டெல்லி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க