60 சதவீத சந்தையைப் பிடித்த 'நெஸ்லே' நிறுவனம்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 'மேகி நூடுல்ஸ்' தடை செய்தபோது, உணவு சந்தையில் தனது பங்கை இழந்த 'நெஸ்லே' நிறுவனம், தற்போது 60 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது.


இது பற்றி அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் சுரேஷ் நாராயணன் கூறுகையில்,'மேகி பிராண்ட் 2015-ல் சந்தித்த நெருக்கடிக்கு பின்பு, எங்கள் சந்தை மதிப்பு சரிந்தது. ஆனால், இன்று சந்தை மதிப்பில் நாங்கள் 60 சதவீதத்தில் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.

நூடுல்ஸ் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய நெஸ்லே நிறுவனம்,  பல புதிய வகை உணவு பொருட்களிலும் அறிமுகப்படுத்தி வருகிறது, இது பற்றி நாராயணன் தெரிவிக்கையில், 'கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 25 முதல் 30 புதிய பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். நெஸ்லே நிறுவனத்தின் கடந்த 104 ஆண்டு கால வரலாற்றில், இவ்வளவு புதிய பொருட்களை அறிமுகம் செய்வது இதுவே முதல் முறை' என்று கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!