கவலைப்படாதீர்கள்..! சொல்கிறார் அருண் ஜெட்லி

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு  நேர்மையான முறையில் சிறிய சேமிப்புகள் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகள் கவலை படத் தேவையில்லை என்றும் அவர்களின் சேமிப்புக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மேலும்  அவர் கூறுகையில், ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வங்கியில் பெரியளவிலான தொகையை மாற்றிக் கொள்ளும் நபர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படமாட்டாது. அவர்கள் மாற்றி கொள்ளும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வரிக்குட்பட்டு தான் இருக்கும் என கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!