புதிதாக வரவிருக்கும் ரூபாய் நோட்டுகளில், நானோ சிப் கிடையாது- ஆர்.பி.ஐ

நாளை மறுநாள் புதிதாக புழக்கத்திற்கு வரவுள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் நானோ சிப் எதுவும் பொறுத்தப்படவில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.


ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளதாகவும், அந்த ரூபாய் நோட்டுகளில் 'நானோ-ஜி.பி.எஸ் சிப்' பொறுத்தப்பட்டு உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இதன் மூலம், ரூபாய் நோட்டுகள் எங்கிருக்கிறது என்று கண்காணிக்க முடியும் என்றெல்லாம் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், ரிசர்வ் வங்கி, இந்த தகவல்களை நிராகரித்துள்ளது.


இந்த விஷயம் தொடர்பாக, ஆர்.பி.ஐ செய்தி தொடர்பாளர் அப்லானா கில்லாவாலா,'இதைப் போன்ற தொழில்நுட்பம், உலகில் வேறெங்கும் கிடையாது. பிறகு எப்படி, இந்தியாவில் மட்டும் சாத்தியப்படும்.' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!