வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (10/11/2016)

கடைசி தொடர்பு:19:50 (10/11/2016)

பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய நான்கு தெருநாய்கள்

மேற்கு வங்காளத்தில் குழந்தையை நான்கு தெருநாய்கள் காப்பாற்றியுள்ளன. நாடு முழுவதுமே தெருநாய்களின் தொல்லைகளை தாங்க முடியாமல் அதை கொலை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் நான்கு தெருநாய்கள் சேர்ந்து ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது. இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் நடந்துள்ளது. பிறந்து பத்து நாட்களே ஆன ஒரு குழந்தை மேற்கு வங்காளத்தின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது.


இதை முதலில் பார்த்துள்ளது அங்கு இருந்த நான்கு தெருநாய்கள்தான். இதையடுத்து அந்த குழந்தையை காகங்களிடம் இருந்து நாய்கள் காப்பாற்றியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர் வரும் வரை தெருநாய்கள் குழந்தைக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளன. இதையடுத்து அந்த ஆசிரியர் குழந்தையின் அழுகுரலை கேட்டு குழந்தையை மீட்டுள்ளார். இதைத்தொடர்ந்து குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளளார். தற்போது குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க