நிமோனியா, டயரியா பாதிப்பால் 2.96 லட்சம் குழந்தைகள் மரணம்


இந்தியாவில் நிமோனியா, டயரியா பாதிப்பால் குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. சர்வதேச தடுப்பூசி மையம் ஒவ்வொரு ஆண்டும், நிமோனியா, டயரியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 15 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியாதான் முதல் இடம்.


இந்தியாவில் கடந்த ஆண்டு டயரியாவால் 2,97,114 குழந்தைகள் உயிரிழந்தன. இந்நிலையில் இந்தாண்டு 2,96,279 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள். இந்த வருடம் மட்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1.5 மில்லியன் கிட்டதட்ட, 15 லட்சம் குழந்தைகளுக்கு நிமோனியா, டயரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிறக்கும் குழந்தைகளில் 1000-ல் 7 குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பும், 5 குழந்தைகளுக்கு டயரியா பாதிப்பும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!