சாலையில் தரையிறங்கி வரலாறு படைக்கவுள்ள இந்திய போர் விமானங்கள் | Fighter jets to touch down Agra-Lucknow Expressway

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (14/11/2016)

கடைசி தொடர்பு:17:11 (14/11/2016)

சாலையில் தரையிறங்கி வரலாறு படைக்கவுள்ள இந்திய போர் விமானங்கள்

 போர் விமானங்கள்

ஆக்ரா- லக்னோ நகரங்களுக்கிடையே சுமார் 302 கிலோ மீட்டர் தொலைவிற்கு எக்ஸ்பிரஸ் ஹைவே சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 13 ஆயிரத்து 200 கோடி மதிப்பீட்டில் 22 மாதங்களில் மிக விரைவாக இந்த சாலை அமைத்து முடிக்கப்பட்டிருக்கிறது.. விமான நிலைய ரன்வேக்களுக்கு இணையான தரத்துடன் இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது.  உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் கனவுத் திட்டம் இது. இதன் பணிகள் முற்றிலும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, வரும் நவம்பர் 21ம் தேதி முலாயம் சிங்கின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த சாலை போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரவுள்ளது. திறக்கப்படும் தினத்தில் இந்த சாலையில் இந்திய விமானப்படை 8 போர் விமானங்கள் இந்த சாலையில் தரையிறங்கவும் டேக் ஆஃப் ஆகவும் செய்கின்றன. சர்வதேச தரத்திற்கு இந்திய சாலைகள் அமைக்கப்பட்டு வருவதை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உன்னாவோ மாவட்டத்தில் உள்ள பங்கர்மா என்ற இடத்தில் 2 கி.மீ தொலைவிற்கு போர் விமானங்கள் தரையிறங்கவும் ஏறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இதற்காக தற்காலிகமாக ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் உருவாக்கப்படுகின்றன. பறவைகள் பறப்பதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விமானங்கள் தரையிறங்கவுள்ள இடத்தை ஏர் வைஸ் மார்ஷல் ராஜேஷ் இஸ்ஸார் மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். 

கடந்த ஆண்டு மிராஜ் 2000 போர் விமானம் டெல்லி- ஆக்ரா யமுனா எக்பிரஸ் ஹைவேயில் தரையிறங்கியது. ஆனால், எட்டு விமானங்கள் சாலையில் தரையிறங்குவதும் ஏறுவதும் இதுவே முதன்முறை. பொதுவாக போர்க்காலங்களில் சாலைகளில் இருந்தும் போர் விமானங்களை இயக்குவதற்கு கண்டறிவதற்கு வசதியாக, இந்திய விமானப்படை இத்தகைய பரிசோதனையில் ஈடுபடுகிறது. 

ஜெர்மனி , போலந்து, சிங்கப்பூர் , பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் போர் விமானங்கள் சாலையில் இறங்கியும் டேக் ஆஃப் செய்தும் இருக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்