வெளியிடப்பட்ட நேரம்: 07:48 (15/11/2016)

கடைசி தொடர்பு:10:19 (15/11/2016)

சைரஸ் மிஸ்திரிக்கு டாடா மோட்டார்ஸ் திடீர் ஆதரவு?

டாடா சன்ஸ் குழுமத்தின் சேர்மன் ஆக இருந்த சைரஸ் மிஸ்திரி கடந்த மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். இப்போது ரத்தன் டாடா, அந்தப் பொறுப்பை தற்காலிகமாக பார்த்து வருகிறார். இந்நிலையில், குழும நிறுவனங்களில் மிஸ்திரி வகிக்கும் அத்தனை பொறுப்புகளில் இருந்து அவரை நீக்க திட்டமிட்டு வருகிறது டாடா சன்ஸ். ஆனால், நேற்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் திடீரென்று, அந்நிறுவனத்தின் இயக்குநராக நீடிக்கும் சைரஸ் மிஸ்திரிக்கு ஆதரவளிப்பது போன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அறிக்கையில் மிஸ்திரியின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், மறைமுகமாக ஆதரவை தெரிவித்து விட்டனர் என்கிறார்கள். டாடா சன்ஸ் குழும நிறுவனமே மிஸ்திரிக்கு ஆதரவளித்துள்ளதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க