'இனி பணம் மாற்ற வந்தால் கையில் மை'- மத்திய அரசு கிடுக்குப்பிடி | 'People who come to exchange money will get indelible ink mark'

வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (15/11/2016)

கடைசி தொடர்பு:12:49 (15/11/2016)

'இனி பணம் மாற்ற வந்தால் கையில் மை'- மத்திய அரசு கிடுக்குப்பிடி

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் எடுக்க வருபவர்களுக்கு இனி கையில் அடையாள மை வைக்கப்படும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதற்கு காரணம், ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுக்க வருவதால் தான். இந்த பிரச்னையை சமாளிக்க, தேர்தலில் பயன்படுத்துவது போன்று, வங்கியில் பணம் எடுக்க வருவோருக்கு கையில் அடையாள மை வைக்கப்படும். இன்று முதல் பெரு நகரங்களில் இது நடைமுறைக்கு வரும். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பல்வேறு நபர்கள் மூலம் பணத்தை மாற்ற முயற்சி செய்கின்றனர். அரசிடம் போதுமான பணம் இருப்பதால், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். ' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க