அசாமில் தீவிரவாதிகள் தாக்குதல் - மூன்று ராணுவ வீரர்கள் பலி

 

அசாம் மாநிலத்தின் பெங்கிரி பகுதியில், உல்ஃபா தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலரை, இந்திய ராணுவம் இன்று காலை சுற்றி வளைத்து தாக்கியது.

அப்போது நடந்த பதில் தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.  தொடர்ந்து என்கவுன்ட்டர் நடந்து வருகிறது. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி, அசாமின் கூடுதல் போலீஸ் உயர் அதிகாரி முகேஷ் அகர்வாலா,'உல்ஃபா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தினரின் வாகனங்களை கிரெனேட் மூலம் தாக்கினர். இதில், மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர்.' என்று கூறினார். 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,'ராணுவத்தினரின் மீது இந்த தாக்கதல் மிகவும் வேதனை அளிக்கிறது. அஸாம் முதல்வருடன் உரையாடி உள்ளேன். இந்த விஷயம் குறித்து உள்துறை அமைச்சகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.' என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!