வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (19/11/2016)

கடைசி தொடர்பு:18:02 (19/11/2016)

இந்தியாவின் உயரமான மனிதருக்கும் வருவாய் இழப்பு! #Demonetisation

வருவாய் இழப்பு

புதிய நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற மத்திய அரசின் அறிவிப்பால், இந்தியாவின் உயரமான மனிதருக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி விட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ள பிரதமர் மோடி உத்தரவிட்டதையடுத்து, பல தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. இந்தியாவின் உயரமான மனிதரும் மத்திய அரசின் அறிவிப்பால் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறார். உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திர சிங். இந்தியாவிலேயே உயரமான மனிதர் இவர்தான். வயது 35 தான் ஆகிறது. 8.1 அடி உயரம் கொண்ட தர்மேந்திர சிங்குக்கு நிரந்தர தொழில் எல்லாம் கிடையாது. பெரிய பெரிய நகரங்களில் பொருட்காட்சி நடைபெறும் இடத்துக்கு மகேந்திர சிங், போய் நின்று கொள்வார். அவரது உயரத்தை பார்த்து பலரும் மகேந்திர சிங்குடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். 

செல்ஃபி மோகம் அதிகரித்திருப்பதால்,  அனேகர் மகேந்திர சிங்குடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். ஒரு செல்ஃபி எடுக்க மகேந்திர சிங் ரூ.20 வாங்குவார். ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்டவர்கள் மகேந்திர சிங்குடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். இதுதான் மகேந்திரசிங்கின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தது. மும்பையில் சுன்னாப்பட்டியில் நடைபெறும் பொருட்காட்சியில் பங்கேற்க வந்திருக்கிறார் மகேந்திர சிங். ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ளவோ செல்ஃபி எடுத்துக் கொள்ளவோ யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால்  அவரது வருமானமும் குறைந்து போய் விட்டது. 

இது குறித்து மகேந்திர சிங் கூறுகையில், ''எம்.ஏ ஹிந்தி படித்துள்ளேன். எனது உயரத்துக்காகவே எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், நான் போகுமிடமெல்லாம் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள மக்கள் ஆசைப்படுவார்கள். மக்களின் ஆர்வத்தைப் பார்த்தேன். பின்னர் அதனையே தொழிலாக மாற்றி விட்டேன். அதற்கு 20 ரூபாய் கட்டணம். மக்களும் மகிழ்ச்சியாகவே அதனைத் தருவார்கள். இப்போது மும்பைக்கு வந்துள்ளேன். ஆனால், நோட்டு பிரச்னையால் எனது வருவாய் பாதிக்கப்பட்டு விட்டது'' என்றார்

மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் பாலியல் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாம். பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.. அங்கேயே இருப்பவர்களின் சேமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது.  

மும்பை, மத்திபுராவை சேர்ந்தவர் சப்மா வர்மா தினமும் 5 வாடிக்கையாளர்களை சந்திப்பார். இதன் மூலம் அவருக்கு தினமும் ஆயிரம் ரூபாய் வருவாயாக கிடைத்து வந்தது. கொல்கத்தாவைச் சேர்ந்த இவரது கணவர் மரணம் அடைந்து விட, சப்னா பாலியல் தொழிலுக்கு வந்தார். ஒரு குழந்தையும் இருக்கிறது. பாலியல் தொழிலில் தினமும் கிடைத்த ஆயிரம் ரூபாயில் 200 ரூபாய் அவரது தலைமைக்கு கொடுத்து விட வேண்டும்.  தற்போது 200 ரூபாய் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறதாம். கையில் இருந்த சேமிப்பும் கரைந்து வருகிறது என வருத்தப்படுகிறார். 

மற்றொரு பாலியல் தொழிலாளியான சபனாவுக்கு மாதம் 30 ஆயிரம் வருவாயாக கிடைத்து வந்தது. கடந்த 10 நாட்களில் 5 ஆயிரம்தான் கிடைத்துள்ளதாம். பெற்றோர் மேற்கு வங்கத்தில் இருக்கின்றனர். தந்தை படுத்த படுக்கையாக இருக்கிறார். மருந்து மாத்திரைகள் வாங்கவே 5 ஆயிரம் வேண்டும் எனக் கூறுகிறார். 

-எம்.குமரேசன்


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்