சீனா செல்கிறார் இந்திய ராணுவத் தளபதி தல்பீர் சிங்

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங், சீனா உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இன்று நான்கு நாள் பயணமாக  சீனா செல்ல உள்ளார்.

சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச உள்ள தல்பீர் சிங், இந்திய எல்லையில்  பரஸ்பர ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை பற்றி விவாதிக்க உள்ளார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில கருத்துகளை தெரிவித்ததால் இந்தியா- சீனா இடையே பதற்றம் நிலவி வந்தது.

மேலும் இந்தியாவில் சீன பட்டாசுகளைத் தடை விதிக்கும் பிரசாரம், சீனாவிற்கு இந்தியா மீதான கோபத்தை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தல்பீர் சிங்கின் இந்த சீன பயணம், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!