இந்திய துணை தூதருக்கு சம்மன் அனுப்பியது பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கான இந்திய துணை தூதர் ஜே.பி. சிங்கிற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நஃபீஸ் கூறுகையில், 'பாகிஸ்தான், எல்லைப்பகுதியில் இந்தியா தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா இன்று நடத்திய தாக்குதலினால் 5 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் அந்நாட்டின் துணை தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது'. என்றார். மேலும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தெற்காசிய இயக்குநர் ஜெனரல் முகமத் பைசல், இதுதொடர்பாக பதியப்பட்ட ஆவணம் ஒன்றையும் இந்திய துணை தூதரிடம் சமர்ப்பித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்திய துணைத் தூதருக்கு பாகிஸ்தான் ஆறு முறை சம்மன் அனுப்பியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!