வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (22/11/2016)

கடைசி தொடர்பு:10:06 (22/11/2016)

பிரசாரத்தைத் தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா

மணிப்பூர் மாநிலத்துக்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா காங்கிரசாரின் பிஜு-வை எதிர்த்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். மணிப்பூர் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதம் இருந்தவர் ஐரோம் ஷர்மிளா. 

சில வாரங்களுக்கு முன்புதான் ஐரோம் ஷர்மிளா தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். இப்போது தனது தொகுதியான குராயில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கியுள்ளார். எந்தவிதமான பண பலமும் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க