சுஷ்மாவுக்கு கிட்னி தானம் செய்ய முன்வந்துள்ள முன்னாள் அமைச்சரின் மனைவி!

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நவம்பர் மாதம் 8-ம் தேதி கிட்னி ஃபெயிலியர் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு தற்போது வயது 64. கிட்னி ஃபெயிலியர்  செய்தி பரவியதை அடுத்து பலரும் சுஷ்மா சுவராஜூக்கு கிட்னி தானம் செய்ய முன் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இம்மாதம் 19-ம் தேதி ஒரு முஸ்லிம் இளைஞர் தன்னுடைய கிட்னியை தானமாக தரத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

‘தனக்கு உதவ முன் வருபவர்கள் மதச்சார்பற்று கொடுக்கலாம். கிட்னிக்கு எந்த மத அடையாளமும் வேண்டாம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சுஷ்மா.

தொடர்ந்து, சிகிச்சைப் பிரிவியில் இருந்து வரும் சுஷ்மாவுக்கு உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சரின் மனைவி மீரா ஜார்ஜ் தன்னுடைய ஒரு கிட்னியை தானமாக கொடுக்க முன் வந்துள்ளார்.

'சுஷ்மா ஸ்வராஜ் நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை, அவருடைய நேர்மை, இவற்றை எல்லாம் பார்த்து வியந்துதான் இந்த உதவியை செய்ய முன் வந்துள்ளதாகவும் மீரா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

மீரா ஜார்ஜின் கிட்னி சுஷ்மாவுக்கு ஏற்புடையதாக இருந்தால், அறுவைசிகிச்சை மூலம் அவருக்கு பொருத்தப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!