500, 1000 ரூபாய் தடை: நாம் பெற்றதும்... இழந்ததும்!

ரூபாய்

500, 1000 ரூபாய் தடை: நாம் பெற்றதும்... இழந்ததும்  என்ன...? புகைப்படத்தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்!

 

ல்லா விஷயங்களிலும் நல்லதும், கெட்டதும் இரண்டறக் கலந்தே இருக்கும். பிரதமர் மோடியின் 1000, 500 ரூபாய் தடை நடவடிக்கை மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? ''கறுப்புப் பணத்துக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்'' என மோடியை புகழ்பவர்கள் ஒருபுறம், ''முன் எச்சரிக்கை இல்லாமல் அவசரகதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை'' என மோடியை விமர்சிப்பவர்கள் மறுபுறம் என நாட்டில் விவாதங்கள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. மோடியின் இந்த நடவடிக்கையால் நாம் பெற்றதும், இழந்தததுமான 10 தொகுப்புகள்  இங்கே...

நாம் பெற்றது.. 

1) இத்தனை நாட்களாக ரியல் எஸ்டேட், வர்த்தகம் மற்றும் கல்வி நிறுவனங்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்புப் பணம், தற்போது செல்லாமல் போயுள்ளது. இதனை மாற்ற, இவர்கள் முயன்றபோது, வருமான வரித்துறையினர் மோப்பம் பிடித்து மடக்கி விடுகின்றனர். கடந்த 12 நாட்களில் 90 ரெய்டுகளை வருமான வரித்துறை நடத்தியுள்ளது. வழக்கமாக ஒருமாதத்துக்கு 35 முதல் 40  வருமான வரித்துறை ரெய்டுகளே நடக்கும்.

2) மோடியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, பல லட்சம் கோடி ரூபாய் பணம் வங்கிகளில் குவிந்து வருகிறது. டெபாசிட் செய்த பணத்தை, வங்கிகள் சந்தையில் வெளியிட்டாலே மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். சந்தையில் இவ்வளவு பணம் வெளியிட வேண்டும் என்றால் வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.

500, 1000 ரூபாய் தடை: நாம் பெற்றதும்... இழந்ததும்  என்ன...? புகைப்படத்தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்!

3) நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கள்ளநோட்டுகள் இந்திய பொருளாதாரத்தையே சிதைத்து வந்தது. கள்ள நோட்டுகள், போதை மருந்து தொழிலுக்கும், பயங்கரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்கவும் அதிகம் பயன்பட்டு வந்தன. தற்போது இவை தடுக்கப்பட்டுள்ளது.

4) கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் பலர், வங்கிக் கணக்கு பற்றி அறியாமல் இருந்தனர். அனைத்து மக்களுக்கும் வங்கி கணக்குக்கான தேவையை மோடியின் இந்த நடவடிக்கை உணர்த்தியுள்ளது.

5) நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு சிறுசிறு கடைகளில் டெபிட், க்ரடிட் கார்டு இயந்திரங்கள் புதிதாக முளைத்துள்ளன. பணமில்லா பரிமாற்றங்கள் அதிகளவில் உயந்துள்ளன. கார்டு இயந்திரங்களுக்கான டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துள்ளது. 

நாம் இழந்தது..

1) பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் தடையால், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 39 மாதங்களில் இல்லாத அளவில் 68.86 ரூபாயாக சரிந்துள்ளது. இதற்குமுன்பு 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் இந்திய ரூபாயின் மதிப்பு 68.80 ரூபாயாக குறைந்திருந்தது.

2) ஜவுளி, நகைகள், தோல் ஆகிய தொழிற்சாலைகளும், அவை சார்ந்த வர்த்தக நிறுவனங்களும் வியாபாரம் இல்லாமல் முடங்கியுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை குறைக்க இந்நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதனால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது.

500, 1000 ரூபாய் தடை: நாம் பெற்றதும்... இழந்ததும்  என்ன...? புகைப்படத்தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்!

3) மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்துநின்ற போதும் 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

4) வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-கள் இல்லாத குக்கிராமங்களில் வாழும் மக்களின் துயரம் சொல்லி மாளாது. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் வருமானம் என்ற நிலையில் வாழும் இம்மக்கள், வேலைக்குச் செல்ல முடியாமல் தினமும் பல கிலோ மீட்டர் பயணம் செய்து பணத்தை மாற்றி வருகின்றனர்.

5) ரூபாய் நோட்டின் தடையால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். ''உள்நாட்டு உற்பத்தி 2% அல்லது அதற்கு மேலாக குறையும்'' என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். 

500, 1000 ரூபாய் தடை: நாம் பெற்றதும்... இழந்ததும்  என்ன...? புகைப்படத்தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்!

 

- ஆ.நந்தகுமார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!