வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (24/11/2016)

கடைசி தொடர்பு:16:25 (24/11/2016)

‘ஆண்களுடன் மாணவிகள் சுற்றக் கூடாது’ - என்.ஐ.டி அதிரடி

கோழிக்கோட்டில் உள்ள தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (NIT) விடுதி நிர்வாகம் ,  குடியிருப்பு வளாகத்தில், ஆண் மாணவர்களுடன் காணப்படும் மாணவிகள் உடனடியாக ஹாஸ்டலில் இருந்து நீக்கப்படுவார்கள் என  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

NIT குடியிருப்பு வளாகத்தில் மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. அப்பல்கலைக்கழக விடுதி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், ஆண் மாணவர்களுடன் குடியிருப்பு வளாகத்துக்குள் சுற்றினால், கடுமையான தண்டனை வழங்கப்படும். மாணவிகள் ஆண்களுடன் காணப்பட்டால் அவர்கள் ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க