பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' உரை

அகில இந்திய வானொலி மூலம் மாதம் ஒரு முறை 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக  உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று மன் கி பாத்தின் மூலம் 26வது முறையாக உரையாற்றினார். அகில இந்திய வானொலி மற்றும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 

கடந்த முறை 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் பேசிய மோடி, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினருக்கு தீபாவளியை அர்ப்பணியுங்கள். அவர்களுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்புங்கள் என்று கூறி இருந்தார்.


இன்று அவர் ஆற்றிய மன் கி பாத் உரையில், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைப் பற்றி,'ரூபாய் நோட்டுகள் விஷயத்தைப் பொறுத்த வரையில், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது மிகப் பெரியது. பழைய நிலைமைக்கு திரும்ப குறைந்தபட்சம் 50 நாட்கள் ஆகும். இந்த அறிவிப்பினால் மக்கள் படும் கஷ்டங்களை நான் அறிகிறேன். ஆனால், 70 ஆண்டுகளாக நம் நாட்டை பிடித்திருக்கும் ஒரு நோய்க்கு, சிகிச்சை சுலபமானதாக இருக்க முடியாது. அஞ்சலக ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் கடின உழைப்பையும் செலுத்தி வருகின்றனர். மக்கள் அனைவரும் இந்த முடிவை ஆதரிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். இந்த அறிவிப்பு நிச்சயம் வெற்றி பெரும்.' என்று தெரிவித்தார்.


'கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஏழைகளை வைத்து தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நேரடி பணப் பரிமாற்றத்திலிருந்து மின்னணு பரிமாற்றம் என்பது கடினமான பாதை தான், இருப்பினும் அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். முற்றிலும் மின்னணுப் பரிமாற்றத்துக்கு மாற முடியாது என்றாலும், பொறுமையாக நாம் அதை நோக்கி பயணிக்க வேண்டும். சிறு வியாபாரிகள் மின்னணு பரிமாற்றத்துக்கு மாறினால் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும்' என்றும் அவர் தன் உரையின் போது பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!