வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (28/11/2016)

கடைசி தொடர்பு:10:07 (28/11/2016)

#BharatBandh பாரத் பந்த் வெற்றியா தோல்வியா?

மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக இன்று நாடு தழுவிய பந்த்துக்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், காங்கிரஸ் பாரத் பந்த்தை வரவேற்கவில்லை. மேலும் சில முக்கிய கட்சிகள் பின்வாங்கிவிட்டன. கேரளாவில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

ரூபாய் நோட்டு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே பாரத் பந்த்தை எதிர்த்துள்ளார். பிரதமர் மோடியின் நடவடிக்கையை கண்டித்து தனியாக பேரணி நடத்துகிறார். 

பெரும்பாலான மாநிலங்களில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. இதனால், பாரத் பந்த் தோல்வி என சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க