ஃபேஸ்புக்கின் எக்ஸ்ப்ரஸ் Wi-Fi திட்டம் பற்றி தெரியுமா? | Facebook to introduce Express Wi-Fi plan

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (28/11/2016)

கடைசி தொடர்பு:12:22 (28/11/2016)

ஃபேஸ்புக்கின் எக்ஸ்ப்ரஸ் Wi-Fi திட்டம் பற்றி தெரியுமா?

ஃபேஸ்புக் நிறுவனம் எக்ஸ்ப்ரஸ் Wi-Fi என்ற புதிய திட்டத்தை கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் 'ஃப்ரீ பேசிக்ஸ்' என்ற திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தது ஃபேஸ்புக். ஆனால், அந்த திட்டத்தைப் பயன்படுத்தி சில இணையதளங்களை மட்டுமே அணுக முடியும் என்று பரவலாக குற்றச்சாட்டப்பட்டதை அடுத்து, அது கைவிடப்பட்டது. 


தற்போது, எக்ஸ்ப்ரஸ் Wi-Fi திட்டம் மூலம், கிராமப்புற இந்தியாவில் இணைய வசதியை பரவலாக்கப் போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களிடம் பேசிவருகிறது ஃபேஸ்புக். இந்த திட்டம் வரும் பட்சத்தில், வேகமான மற்றும் விலை குறைவான இன்டர்நெட் வசதி அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறுகிறது ஃபேஸ்புக்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க