வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (02/12/2016)

கடைசி தொடர்பு:18:19 (02/12/2016)

நிலாவுக்கு செல்லும் இந்திய ரோபோ

இந்தியாவின் 'டெக் ஸ்டார்ட்-அப்ஸ்' நிறுவனங்களில் ஒன்று Team Indus . இந்த நிறுவனம் சார்பில் அடுத்த ஆண்டு ரோபோ ஒன்றை நிலாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கூகுள் நடத்தும் பிரபல போட்டி ஒன்றில் வெல்வதற்காக இந்த ஸ்கெட்ச் போட்டிருக்கிறது Team Indus. முதல் தடவையாக இஸ்ரோ, தனியார் நிறுவனம் ஒன்றுக்காக  PSLV ராக்கெட்டை பயன்படுத்த அனுமதித்திருக்கிறது.

அதன்படி,  அடுத்த ஆண்டு இறுதிக்குள் ரோபோவை நிலாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். நிலாவுக்கு சென்று அங்கு HD வீடியோ மற்றும் படங்களை இவர்கள் எடுப்பார்கள். இந்த ரோபோவை வடிவமைக்கும் பணி தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது.  இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற 20 விஞ்ஞானிகள் உள்பட 100  பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க