தியேட்டரில் இந்திய மகளிர் ஹாக்கி கேப்டனின் வாக்குவாதத்திற்கு இதுதான் காரணம்! | Hockey captain walks Out Of cinema theatre after It didn't play the National Anthem

வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (02/12/2016)

கடைசி தொடர்பு:18:19 (02/12/2016)

தியேட்டரில் இந்திய மகளிர் ஹாக்கி கேப்டனின் வாக்குவாதத்திற்கு இதுதான் காரணம்!

சினிமா தியேட்டரில் தேசிய கீதம் இசைக்கப்படாததால், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் வந்தனா கட்டாரியா, படம் பார்க்காமல் கோபத்தில் தியேட்டரை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

வந்தனா  குடும்பத்தினருடன் ஹரித்துவாரில்  ’Dear Zindagi’ என்ற திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளார். சினிமா தியேட்டரில் படம் துவங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் இசைக்கப்படாததால், தியேட்டர் உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் படம் பார்க்காமல் வெளியேறியுள்ளார்.  உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தேசிய கீதம் இசைக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளரை வந்தனா எச்சரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க