வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (04/12/2016)

கடைசி தொடர்பு:15:31 (04/12/2016)

குழந்தைகளின் ஊட்டச்சத்தை அறிய சர்வே

இந்தியாவில், குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை தெரிந்து கொள்ள தேசிய அளவிலான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. யுனிசெப் அமைப்புடன் இந்திய அரசு இணைந்து இந்த தேசிய கணக்கெடுப்பை நடத்த உள்ளன.

நாடு முழுவதிலிருந்தும் 0-19 வயதுக்கு உட்பட்ட 1,20,000 குழந்தைகளிடம் இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் சர்வே பணிகள் முடியும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே 7 மாநிலங்களில் இந்த சர்வே முடிந்துவிட்ட நிலையில் மற்ற மாநிலங்களிலும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பில் குழந்தைகளிடம் உள்ள வைட்டமின், மினரல் மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அளவுகள் கணக்கெடுக்கப்படும். இதன் மூலம், தேசிய அளவில் குழந்தைகள் நலனுக்காக வகுக்கப்படும் கொள்கைகளில் தெளிவு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க