இலவச அழைப்பை அறிமுகப்படுத்தும் ஏர்டெல்

ரிலையன்சின் ஜியோ நிறுவனம் தனது இலவச சேவையை மார்ச் வரைக்கும் நீட்டித்ததை அடுத்து ஏர்டெல் நிறுவனம் வாய்ஸ் அழைப்புகளை இலவசமாக்கும் புதிய பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. 

ஏர்டெல்லின் புதிய 345 ரூபாய் பேக் மூலம் ப்ரிபெய்ட் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் இலவச வாய்ஸ் காலிங் மற்றும் 1GB 4G டேட்டாவும் கொடுக்கப்படும். அதே போல, 145 ரூபாய் பேக் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ஏர்டெல் சிம்களுக்கு மட்டும் இலவச காலிங் மற்றும் 300 MB 4GB டேட்டாவும் கொடுக்கப்படும். இரண்டுக்கும் வேலிடிட்டி 28 நாட்கள் தான். 

ஜியோ வருகைக்குப் பிறகு ஏர்டெல் நிறுவனம் மட்டுமின்றி, ஏர்செல் நிறுவனமும் அதன் பங்கிற்கு சிறப்பு பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!