வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (10/12/2016)

கடைசி தொடர்பு:14:10 (10/12/2016)

சுஷ்மாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: குவியும் பிரார்த்தனைகள்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. கடந்த நவம்பர் 16 ஆம் தேதி, சிறுநீரக கோளாறு காரணமாக சுஷ்மா  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக  சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அன்றிலிருந்து ட்விட்டரில் சுஷ்மாவுக்கு பிரார்த்தனைகள் குவிந்தவண்ணம் உள்ளது.  மருத்துவமனையில் இருந்த போதும் மிக ஆக்ட்டிவாக அரசு பணிகளை சுஷ்மா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க