ஒருவர் 2 தொகுதிகளில் போட்டியிட வருகிறது தடை? | One cannot contest in two Constituencies moving forward

வெளியிடப்பட்ட நேரம்: 05:47 (14/12/2016)

கடைசி தொடர்பு:10:38 (14/12/2016)

ஒருவர் 2 தொகுதிகளில் போட்டியிட வருகிறது தடை?

ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான கமிஷன்; ஒரு வேட்பாளர், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால், மக்கள் பணம் வீணாவதை முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. முக்கியமாக வேட்பாளர் வெற்றி பெற்று அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும்போது, வேட்பாளரை நம்பி வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இதன் மூலம் அநீதி இழைக்கப்படுவதாகவும்,  இந்த கமிஷன் சுட்டிக்காட்டி உள்ளது. இதனால், ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க