இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

நான்கு நாள் இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 4 நாள் இடைவெளிக்குப் பிறகு, இன்று மீண்டும் கூடுகிறது. கூட்டத்தொடரின் மீதி 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ரூபாய் நோட்டு பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் என்பதால், அவர்களுக்குப் பதிலடி தரும் வகையில், பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று அக்கட்சியின் மேலிடம் அறிவுறுத்தி உள்ளது. அதுபோல், காங்கிரஸ் கட்சியும் தனது எம்.பி.க்கள் அனைவரும் இன்று தவறாமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, இன்று காலை, காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டமும் டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பாஜக அரசை மடக்கும் வகையில் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதனால், இன்று முதல் மீதியுள்ள 3 நாட்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!