அறிமுகமானது அமேசான் ப்ரைம் வீடியோ..!

ஹாலிவுட், உள்ளூர் சினிமாக்கள் மற்றும் சர்வதேச டிவி சீரீஸ்களை ஆன்லைனில் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமேசான் நிறுவனத்தின் 'அமேசான் ப்ரைம் வீடியோ' இந்தியாவில் இன்று முதல் செயல்பட ஆரம்பமாகி இருக்கிறது

. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஃபோன்களிலும் ப்ரைம் ஆப்-ஐ தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான ஆண்டு சந்தா 999 ரூபாய். சலுகை விலையாக 499ரூபாய்க்கு தற்போது கிடைக்கிறது. ஒரு மாதத்துக்கு 50 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல் ஆட்டத்தையும் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அமேசான் இணையத்தில் ஏற்கனவே 'ப்ரைம் வாடிக்கையாளர்களாக' இருப்பவர்கள் இலவசமாகவே ப்ரைம் வீடியோ ஆக்சஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!