Published:Updated:

சிறுநீர் கழிக்கும்போது தாங்கமுடியாத வலி; ஆணுறுப்பை கோடரியால் வெட்டிய முதியவர்! - அதிர்ச்சி சம்பவம்

ஆணுறுப்பை கோடரியால் வெட்டிய முதியவர்

சிறுநீர் கழிக்கும்போது தொடர்ந்து வலி ஏற்பட்டதால், 75 வயது முதியவர் தன்னுடைய ஆணுறுப்பை கோடரியால் துண்டித்தார்.

சிறுநீர் கழிக்கும்போது தாங்கமுடியாத வலி; ஆணுறுப்பை கோடரியால் வெட்டிய முதியவர்! - அதிர்ச்சி சம்பவம்

சிறுநீர் கழிக்கும்போது தொடர்ந்து வலி ஏற்பட்டதால், 75 வயது முதியவர் தன்னுடைய ஆணுறுப்பை கோடரியால் துண்டித்தார்.

Published:Updated:
ஆணுறுப்பை கோடரியால் வெட்டிய முதியவர்

வயதான காலத்தில் முதியவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் வருவது வழக்கம்தான். சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் கடுமையாக வலிக்கும். அதற்காக மத்தியப் பிரதேச முதியவர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், தமோஹ் மாவட்டத்தில் உள்ள மெஹ்ரோன் என்ற இடத்தில் வசிப்பவர் நித்தியானந்த் திவாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 75 வயதாகும் திவாரிக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வந்திருக்கிறது. அதோடு அவரின் ஆணுறுப்பிலும் கடுமையான வலி இருந்து வந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சிறுநீர் கழிப்பது என்பது திவாரிக்கு நரக வேதனையாக இருந்தது. இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் இருந்தார். இதற்காக எடுத்துகொண்ட சிகிச்சைகளும் பலனலிக்கவில்லை. சம்பவத்தன்றும் வழக்கம் போல் சிறுநீர் கழித்தபோது கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, உடனே வீட்டிற்குள் சென்ற திவாரி அங்கு இருந்த கோடரியை எடுத்து வந்து தன்னுடைய ஆணுறுப்பை வெட்டி எடுத்துவிட்டார்.

முதியவர்
முதியவர்

இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியில் கதறினார். உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து தமோஹ் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததால் தேவையான ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது. அவர் வெட்டிய உறுப்பும் மோசமாக சேதமடைந்திருக்கிறது. தேவையான ரத்தம் செலுத்திய பிறகு ஆபரேஷன் செய்யப்படும் என்று மாவட்ட மருத்துவமனை டாக்டர் முகேஷ் தெரிவித்தார். உறுப்பை மீண்டும் சேர்ப்பது கடினம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.