நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை

சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வீடுகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு சூரிய மின் சக்தி இணைப்பு தருவதாக கூறி கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக நடிகை சரிதா நாயர் மற்றும் முன்னாள் அமைச்சர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், நடிகை சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!