வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (16/12/2016)

கடைசி தொடர்பு:17:38 (16/12/2016)

பழைய ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து பல வழக்குகள்  தொடரப்பட்டுள்ளன. மேலும் நேற்றுடன் பழைய ரூபாய் நோட்டுகள் மருத்துவமனை, ரயில் நிலையங்களில் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனை நீட்டிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி பழைய நோட்டுகளைப் பயன்படுத்த கால அவகாசம் நீட்டிக்க  மறுப்பு தெரிவித்துவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க