மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் ஒ.பி.எஸ்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியைச் சந்திக்க இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமரிடம், தமிழகத்திற்கு வர்தா  புயல் நிவாரண நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை விடுக்கவுள்ளார். கடந்த திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்த வர்தா புயல், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் சேதங்களை ஏற்படுத்திவிட்டது. மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு தமிழகத்தில் வர்தா புயலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்றும், புயல் நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மோடியிடம் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!