எழுத்தாளர் மீது பாய்ந்தது தேசத் துரோக வழக்கு | Malayalam writer charged with Sedition for mocking National Anthem

வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (19/12/2016)

கடைசி தொடர்பு:12:54 (19/12/2016)

எழுத்தாளர் மீது பாய்ந்தது தேசத் துரோக வழக்கு

தேசிய கீதத்திற்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த கேரள எழுத்தாளர் ’கமல் சி சவரா’ மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எழுத்தாளரும், தியேட்டர் கலைஞருமான கமல்,  ஃபேஸ்புக்கில் தேசிய கீதத்தை அவமதித்ததாக பாஜக இளைஞர் அணியான ’யுவ மோர்ச்சா’, கேரளாவின் நடக்கவு காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

பாஜக அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் நேற்று கமலை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து  அவர் மீது 124 (A) பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாரதிய ஜனதா கட்சி இந்த சம்பவத்தை அரசியலாக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க