வெளியிடப்பட்ட நேரம்: 20:42 (19/12/2016)

கடைசி தொடர்பு:20:41 (19/12/2016)

ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேருக்கு தூக்கு

ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பயங்கரவாதிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில்,  கடந்த 2013-ல் தில்சுக் நகர் வணிக வளாகங்கள் உள்ள பகுதியி்ல் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.  சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 18 பேர் பலியாயினர் . 130 பேர் காயமுற்றனர். 

இந்த குண்டு வெடிப்பில், ஹிஸ்புல் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக யாசின், ரியாத் பட்கல் , காதி , அஜீஸ் சேக், வாகாஸ் ஆகிய 5 பேருக்கு மரணத்தண்டனை விதித்து தேசிய புலனாய்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க