கட்டாயமாகிறது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு

10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை கட்டாயமாக்கும் பரிந்துரையை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்புக்கு 2018-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.  சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு வரை பொதுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, மாணவர்களின் விருப்பத்தின்படியே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவர்கள் நேரடியாக பிளஸ்-2 வகுப்பில் பொதுத் தேர்வை சந்திப்பதால் சிரமங்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!