ரெபோ விகிதம் 8% ஆக குறைப்பு;வங்கிக் கடன் வட்டி குறையும்! | RBI cuts repo rate by 50 bps to 8%, loans may get cheaper

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (17/04/2012)

கடைசி தொடர்பு:16:24 (24/11/2017)

ரெபோ விகிதம் 8% ஆக குறைப்பு;வங்கிக் கடன் வட்டி குறையும்!

மும்பை:வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிததத்தை -ரெபோ- 8% ஆக ரிசர்வ்  வங்கி குறைத்துள்ளது. இதனால் வங்கிகள் வழங்கும் வாகனக் கடன் மற்றும்  வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதம் குறையும்.

ரெபோ எனப்படும் ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடனுக்கான  வட்டிவிகிதம், இதுவரை 8.5 சதவீதமாக இருந்தது.அதனை தற்போது 8 சதவீதமாக  குறைப்பதாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட கடன்கொள்கைகளுக்கான அறிவிப்பில்  தெரிவித்துள்ளது.

அதேசமயம் சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தில்  மாற்றமில்லை என்றும்,அது தொடர்ந்து 4.75 சதவீதமாக நீடிக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பணவீக்கம் நிதிபற்றாக்குறை நிலைமைகளுக்கு இடையே,கட்ந்த மூன்று  ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக ரெபோ விகிதத்தை ரிசர்வ் வங்கி  குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெபோ விகிதம் குறைப்பால் வங்கிகள் வழங்கும் வாகனக் கடன் மற்றும்  வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதம் குறையும்.


டிரெண்டிங் @ விகடன்