69 % பேருக்கு மன அழுத்தம்!

இந்தியாவில் 69 சதவீதம் பேருக்கு மன அழுத்தம், சோர்வு, பயம் போன்ற பாதிப்புகள் இருப்பதாக LLLF (The Live Love Laugh Foundation) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், "சராசரியாக 32 வயது மிக்கவர்கள் மனச்சோர்வால் பாதிக்கப்படுகின்றனர். 42.5 சதவீதம் தனியார் ஊழியர்கள் சோர்வு, பதற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் கார்ப்பரேட் நிறுவனங்களில் மன அழுத்தம், சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில், 45 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 55 சதவீதம் பேருக்கு குறைவான நண்பர்கள் இருப்பதாலே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் 66 சதவீதம் சி.இ.ஓ.க்கள் மன அழுத்தமின்றி இருக்கின்றனர். குறிப்பாக மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு அணுக, நாடு முழுவதும் 43 சுகாதார மையங்களே இருக்கின்றன". என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!