'மிகவும் தனிமையாக உணர்கிறேன்' - ரத்தன் டாடா | These days are Very lonely, Says Rathan Tata

வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (25/12/2016)

கடைசி தொடர்பு:16:33 (25/12/2016)

'மிகவும் தனிமையாக உணர்கிறேன்' - ரத்தன் டாடா

டாடா சன்ஸ் குழுமத்திற்கு சேர்மேனாக இருந்த சைரஸ் மிஸ்திரி சமீபத்தில் எழுந்த உள்விவகார சச்சரவுகளால் வெளியேற்றப்பட்டார். இந்த விஷயம் சம்பந்தமான பல செய்திகளும் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக வந்து கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு மாத காலமாக பேசப்பட்டு வரும் விஷயத்தைப் பற்றி டாடா குழும தலைவர் ரத்தன் டாடா கூறுகையில், 'கடந்த இரு மாதங்களாக என் புகழ் மற்றும் டாடா குழுமத்தின் புகழைக் கெடுக்க, திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்து செய்திகளை பார்க்கும்போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த நாட்களில் நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன். எவ்வளவுதான் கடினமாக இருந்தாலும் உண்மை ஒரு நாள் வெற்றி பெறும். இந்த கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்த, என் பங்குதாரர்கள் அனைவருக்கும் நன்றி' என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க