தேசியசின்னம் அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் மறைவு

இந்தியாவின் தேசிய சின்னமான, அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர் தீனநாத் பார்கவா. இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீனநாத், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலமானார். அவருக்கு வயது 89.  அவர் கொல்கத்தா சாந்தி நிகேதனில் மூன்று ஆண்டு கால, நுண்கலை படிப்பை முடித்தவர் ஆவார். சில மாதங்களாக தீனநாத் இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!