மஹிந்திரா வாகனங்களின் விலை உயரப்போகிறது!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தான் தயாரிக்கும் வாகனங்களின் விலைகளை உயர்த்த உள்ளது. கார்களின் விலை 3,000 ரூபாயில் இருந்து 26,500 ரூபாய் வரை உயர உள்ளது. சிறிய வர்த்தக வாகனங்களின் விலை 6,000 ரூபாய் வரை உயர உள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. தயாரிப்பு செலவுகள் அதிகரித்ததுதான் காரணமாம்!

ஜனவரி மாதம் முதல் ஹூண்டாய், நிஸான், டாடா மோட்டார்ஸ், ரெனோ, டொயோட்டா, மெர்சிடீஸ் பென்ஸ், இசுஸூ ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலைகளை உயர்த்த உள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!