ரயில் சீசன் டிக்கெட்டை ஆன்லைனில் எடுத்தால் தள்ளுபடி | Discount for Rail Season tickets in online

வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (25/12/2016)

கடைசி தொடர்பு:10:27 (26/12/2016)

ரயில் சீசன் டிக்கெட்டை ஆன்லைனில் எடுத்தால் தள்ளுபடி

நாடு முழுவதும் ரயில் சீசன் டிக்கெட்களை ஆன்லைன் மூலம் எடுத்தால், 0.5% தள்ளுபடி என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 1-ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் ரொக்க பரிவர்த்தனை இல்லாத, அனைத்துக்கும் சேவை கட்டணம் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துபவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ரயில் சீசன் டிக்கெட்டை பயன்படுத்துவதில், புறநகர் ரயிலை பயன்படுத்துபவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க