ஜியோ-வுக்கு செக் வைக்கும் ஏர்டெல்..!

இந்த மாதத்தின் முற்பகுதியில் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்குத் தான் அளித்து வரும் இலவச சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்தது. இந்த நடவடிக்கை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விதிமுறைகளுக்கு புறம்பானது என்று கூறி TDSAT-ல் (Telecom Disputes Settlement and Appellate Tribunal) ஏர்டெல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த TDSAT, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஏர்டெல்லின் புகார் பற்றி விளக்கம் கேட்டது. இது பற்றி பதில் கூற இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளது. இதனால், வழக்கு விசாரணை வரும் ஜனவரி 6-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!