Published:Updated:

சுதந்திர இந்தியா - 75 ஆண்டுகள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் டு அணு ஆயுத வளர்ச்சி - 15 சாதனைகள்!

சுதந்திர தினம்

கிழக்கு பாகிஸ்தானில் அரச வன்முறை நிகழ்ந்தபோது இந்தியா தலையிட்டு வங்க தேசம் என்ற நாடு உருவாகக் காரணமானது. அந்தப் போரின்போது 80,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். உலகின் மிகப்பெரிய சரணடைதல் நிகழ்வு இது.

சுதந்திர இந்தியா - 75 ஆண்டுகள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் டு அணு ஆயுத வளர்ச்சி - 15 சாதனைகள்!

கிழக்கு பாகிஸ்தானில் அரச வன்முறை நிகழ்ந்தபோது இந்தியா தலையிட்டு வங்க தேசம் என்ற நாடு உருவாகக் காரணமானது. அந்தப் போரின்போது 80,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். உலகின் மிகப்பெரிய சரணடைதல் நிகழ்வு இது.

Published:Updated:
சுதந்திர தினம்
வரும் ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தத் தருணத்தில் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் இந்தியா கடந்து வந்த மைல்கற்கள் குறித்தும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக நிகழ்த்திய பல்வேறு சாதனைகள் குறித்தும் இங்கே காண்போம்.

1. குளோபல் ஃபயர் பவர் என்ற ராணுவ ஆய்வு அமைப்பு, உலகின் 140 நாடுகளுடைய ராணுவ வலிமையை ஆய்வு செய்து தரவரிசை வெளியிடுகிறது. இதன் கணிப்பின்படி அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து உலகின் நான்காவது சக்திவாய்ந்த ராணுவ தேசம் இந்தியா.

2. இந்தியா 1974-ம் ஆண்டிலேயே அணுகுண்டு சோதனை செய்து, உலகின் ஐந்து அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இணைந்துவிட்டது.

3. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைச் சொந்தமாக உருவாக்கும் திறன்படைத்த மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2009-ம் ஆண்டு இந்தியா உருவாக்கிய ஐ.என்.எஸ் அரிஹந்த் அப்படிப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 3,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டன. அணுசக்தி ஏவுகணைகளையும் ஏவித் தாக்கும் திறன் படைத்த கப்பல்கள் இவை.

ஐ.என்.எஸ் விக்ராந்த்
ஐ.என்.எஸ் விக்ராந்த்

4. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டனுடன், விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களை சொந்தமாக உருவாக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது இந்தியா. ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் இந்தத் திறன் கொண்டது.

5. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளைப் போலவே, ஏவுகணை வல்லமை பெற்ற ஆறாவது நாடாக ஆகியுள்ளது இந்தியா. நாம் உருவாக்கிய பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, மணிக்கு 4,900 கி.மீ வேகத்தில் பயணம் செய்து தாக்கும் வல்லமை பெற்றது. கிட்டத்தட்ட ஒலியின் வேகத்தைப் போல 2.8 மடங்கு வேகம். சீனாவிடம் கூட இவ்வளவு சக்தி வாய்ந்த ஏவுகணை இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

6. குறைந்த எடையுள்ள போர் விமானங்களைச் சொந்தமாக உருவாக்கும் திறனை இந்தியா பெற்றுவிட்டது. இந்த தேஜாஸ் விமானங்களை 2019-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைக்க ஒப்புதல் தரப்பட்டது.

7. விண்ணில் சுற்றியபடி நம்மை உளவுபார்க்கும் அந்நிய செயற்கைக்கோள்களை ஏவுகணைகளால் தாக்கி அழிக்கும் (ASAT Missiles) வல்லமையை நாம் பெற்றுவிட்டோம். 'மிஷன் சக்தி' என்ற இந்தத் திட்டம் 2019-ம் ஆண்டில் வெற்றியடைந்தது.

8. அந்நிய சக்திகள் ஏவும் அதிபயங்கர ஏவுகணைகளை விண்ணிலேயே கண்டறிந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தடுப்பு அமைப்பை (Anti ballistic missile) இந்தியா உருவாக்கியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையைச் செய்தது இந்தியா.

மிஷன் சக்தி - ASAT ஏவுகணை
மிஷன் சக்தி - ASAT ஏவுகணை

9. நிலத்திலிருந்தும், நீரிலிருந்தும் வானத்திலிருந்தும் அணுசக்தி ஏவுகணைகளை ஏவும் திறன் படைத்த நாடுகளை 'Nuclear Triad Capability' உள்ள நாடுகள் என்பார்கள். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இந்தத் தகுதியைக் கொண்ட ஆறாவது வல்லரசு தேசம், இந்தியா.

10. உலகிலேயே அதிகம் வெளிநாட்டு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. இதை மாற்றுவதற்காக உள்ளூரில் ஆயுதத் தயாரிப்புகளை இந்தியா ஊக்குவித்துள்ளது. இதற்காக 309 வகையான ஆயுதங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

11. ஆயுதங்களை இறக்குமதி செய்வது போலவே ஏற்றுமதியும் செய்கிறது இந்தியா. கடந்த நிதியாண்டில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி நடந்துள்ளது.

12. உத்தரப் பிரதேசத்திலும் தமிழகத்திலும் தலா 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் அளவுக்கு ஒவ்வொரு பாதுகாப்புத் துறை தொழில் மண்டலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியில் ராணுவத் தளவாடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

13. கிழக்கு பாகிஸ்தானில் அரச வன்முறை நிகழ்ந்தபோது இந்தியா தலையிட்டு வங்க தேசம் என்ற நாடு உருவாகக் காரணமானது. இப்படி ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கு உதவிய பெருமை வெகுசில நாடுகளுக்கே கிடைத்திருக்கிறது. அந்தப் போரின்போது 80,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். உலகின் மிகப்பெரிய சரணடைதல் நிகழ்வு இது.

காஷ்மீர் - சர்ஜிகல் ஸ்ட்ரைக்
காஷ்மீர் - சர்ஜிகல் ஸ்ட்ரைக்

14. உலகின் மிக உயரமான எல்லைப் பிரதேசம் எனக் கருதப்படும் சியாச்சின் மலையை இந்திய ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கார்கில் பகுதியில் 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியபோது நம் ராணுவம் தீரத்துடன் போரிட்டு வெற்றி அடைந்தது. உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தில் நிகழ்ந்த போர் இது.

15. மியான்மர் காடுகளில் பதுங்கியிருந்து இந்தியா மீது தாக்குதல் தொடுத்த போராளிக் குழுக்களை அங்கே சென்று தாக்கி அழித்தது இந்திய ராணுவம். இதேபோன்ற சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை பாகிஸ்தானுக்குள் சென்றும் நடத்தியிருக்கிறது நம் ராணுவம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!