வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (29/12/2016)

கடைசி தொடர்பு:10:34 (30/12/2016)

வருமானவரி சோதனைகளில் ரூ.550 கோடி பறிமுதல்

நாடு முழுவதும், Demonetisation-க்கு பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் நேற்றுவரை, ரூ. 550 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. அவற்றில் ரூ.105 கோடி புதிய ரூபாய் நோட்டுகள். மேலும், ரூ. 4,172 கோடிக்கான வருமானம் கணக்கில் காட்டப்படவில்லை என்றும் வருமானவரித்துறை கூறியுள்ளது. மேலும், இவற்றில் ரூ.91 கோடி மதிப்பிலான ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை கூறியுள்ளது. முக்கியமாக, நேற்றுவரை, வருமானவரி தொடர்பாக நாடு முழுவதும் 5,000 பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க