துணைமுதல்வர் அலுவலகத்திலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில், கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். மணீஷின் அலுவலகத்துக்குள் நேற்றிரவு புகுந்த, மர்ம நபர்கள் கணினி மற்றும் ஆவணங்களை திருடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை அலுவலகத்துக்குச் சென்ற ஊழியர் கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். குறிப்பாக மணீஷ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து, சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு, கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 

அதேபோல், சிசிடிவி கேமரா ரெக்கார்டாகும் DVR கருவியையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கொள்ளையர்களின் கைரேகையை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!